/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (நவ. 17- வியாழக்கிழமை ) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய  காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்


நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (நவ. 17- வியாழக்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்.

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 40 முதல் 60, தக்காளி ரூ. 14 முதல் 16, வெண்டைக்காய் ரூ. 26 முதல் 30, அவரை ரூ. 60 முதல் 70, கொத்தவரை ரூ. 36, முருங்கைக்காய் ரூ. 80, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 36 முதல் 40, பாகல் ரூ. 50 முதல் 60, பீர்க்கன் ரூ. 40 முதல் 55, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 15, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30.

எலுமிச்சை ரூ. 70, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 36 முதல் 40, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 28 முதல் 32, கேரட் ரூ. 50 முதல் 56, பீட்ரூட் ரூ. 30 முதல் 60, உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 26 முதல் ரூ. 28, காளிபிளவர் ரூ.15 முதல் 30, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20.

இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ. 50, பச்சைமிளகாய் ரூ. 36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 32 முதல் 36, நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 36 முதல் 40, தர்பூசணி ரூ.15, விளாம்பழம் ரூ.40.

Updated On: 17 Nov 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு