/* */

மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த தமாகா

namakkal news, namakkal news today-நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி  கலெக்டரிடம் மனு அளித்த தமாகா
X

namakkal news, namakkal news today- மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம், தமாகாவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

namakkal news, namakkal news today- நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் கோஸ்டல் இளங்கோ, மேற்கு மாவட்ட தலைவர் திருச்செங்கோடு செல்வகுமார், மாவட்ட துணை தலைவர்கள் பெருமாள், சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர்கள் சுப்பிரமணியம், ஈஸ்வரன், நாமக்கல் நகர தலைவர் சக்தி வெங்கடேஷ், திருச்செங்கோடு நகர தலைவர் மூர்த்தி, மகளிரணி பாவாயி உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 3 ஆண்டுகள், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வணிக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்

இந்நிலையில் தற்போது தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், அவற்றின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். தமிழக அரசு கடந்த காலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இப்பொழுது வணிகம், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்தி மறைமுகமாக மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கிஇருக்கிறது. உடனடியாக தமிழக அரசு சென்ற ஆண்டு உயர்த்திய வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வு, இப்பொழுது வணிகம், சிறு,குறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை இரண்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 Jun 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...