/* */

தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநிலஇளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படும். இந்த இளைஞர் விருது ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திம் வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆக. 15 சுதந்திர தின விழாவில் த மிழக முதல்வரால் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் 1.4.2021 முதல் 31.3.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அவர்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றி இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். இந்த விருதுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பப் படிவங்களை , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வெப்சைட்டில் 1.5.2022 மாலை 4 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 April 2022 2:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...