/* */

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு
X

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாமக்கல்லில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. ராமலிங்கம் மரக்கன்று நட்டு வைத்தார்.

நாமக்கல் நகரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

நாமக்கல் நகரில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணையில் நடைபெற்ற மரம் நடும் விழாவிற்கு நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் தலைமை வகித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வராஜ், சன் இந்தியா ஹேச்சரீஸ் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தொடர்ந்து திருச்செங்கோடு தாலுகா, மானிக்கம்பாளையம் கிராமத்தில் கணகராஜ் என்பவரது தேரட்டத்தில் நடைபெற்ற, உலக சுற்றுச்சூழல் தின விழாவில் 3,030 விலையுயர்ந்த மரங்களான சந்தனம், செம்மரம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 6,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

காவேரி கூக்குரல் சார்பாக இந்த ஆண்டு 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரங்கள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவருகிறது. காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டியில் கடந்த 2 நாட்களில் சுமார் 140 விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் சத்குருவால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வது, எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும், என்னென்ன ஊடுபயிர்கள் செய்யலாம் என்பது போன்ற மரவிவசாயம் சார்ந்த முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அனைத்து ஈஷா நாற்றுப் பண்ணைகளிலும் விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள், ஒன்றுக்கு ரூ.3 வீதம் மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறியவும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  3. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  5. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  6. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  7. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  8. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  9. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  10. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்