/* */

நாமக்கல்லில் ரூ.19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு நாளை அடிக்கல்

நாமக்கல் புதிய நகரில் 19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையம் அமைக்க நாளை 20ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரூ.19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு நாளை அடிக்கல்
X

பைல் படம்

நாமக்கல் புதிய நகரில் 19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையம் அமைக்கநாளை 20ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.

நாமக்கல் டவுன் பஞ்சாயத்தாக இருந்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக மாறி, தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட தலைநகராக ஆன பிறகும், பஸ் நிலையம் விரிவாக்கப்படவும் இல்லை. புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவும் இல்லை. இதனால் நாமக்கல் நகரில் அடிக்கடி போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கார்ஷமீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சலையில் நாமக்கல் நகரம் அமைந்திருந்தும், போக்குவரத்து நெரிசல் காரணமாக தொலூர பஸ்கள் டவுனுக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றன.

தற்போதைய நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில், நாமக்கல் - சேலம் ரோட்டில் முதலைப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம், நகாட்சி நிர்வாகத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு, புதிய பஸ் நிலையம் அமைவிடத்தை, சில மாதங்களுக்கு முன் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலையை பஸ் நிலையத்துடன் இணைப்பதற்கான, அனுகு சாலைக்காக, ரிங் ரோடு அமைப்பதற்காகன இடம் கையகப்டுத்துவதில் காலதமாம் காரணமான அமைந்தது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கெள்ளுமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரிங் ரோட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையெட்டி முதலைப்பட்டி அருகில், நவீன வசதிகளுடன் சுமார் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய பஸ் நிலைய அடிக்கல்நாட்டு விழா நாளை 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிப் பேசுகிறார். விழவிற்கான ஏற்பாடுகளை நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Updated On: 20 Oct 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!