/* */

தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: அமைச்சர் மதிவேந்தன்

தமிழக அரசின் இலவச மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

HIGHLIGHTS

தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: அமைச்சர் மதிவேந்தன்
X

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, மருத்துவ முகாமில், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத்தலைவர் மதுராசெந்தில் முன்னிலை வகித்தார்.

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை கிடைக்க, தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், 7 நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கே முன்னுதாரணமான திட்டம் தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டமாகும்.

இதனை அனைத்து பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை பெறுவற்காக விண்ணப்பித்த 5 பயனாளிகளுக்கு, உடனடியாக மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில், 159 பயனாளிகளுக்கு ரூ.3.84 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

டிஆர்டிஏ திட்ட இயக்குனர் சிவக்குமார், திருச்செங்கோடு ஆர்டிஓ கவுசல்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு