/* */

நாமக்கல்லில் விவசாயிகளுக்கு மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப் செட்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப் செட் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் விவசாயிகளுக்கு மானியத்துடன்  மின்சார மோட்டார் பம்ப் செட்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 3 ஏக்கர் வரை சொந்த நிலம் வைத்துள்ள, சிறு, குறு விவசாயிகள், மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள் பெறலாம். பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப்செட்டுகளை மாற்றுவதற்கும் அல்லது புதிய மின் மோட்டார் பம்ப்செட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 எச்.பி வரை) மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியம் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான தாசில்தார் சான்று, மின் இணைப்பு சான்றின் நகல், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களை அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அனுகி தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Updated On: 22 Dec 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!