/* */

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

நாமக்கல்லில், மாவ ட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
X

நாமக்கல்லில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு ஸ்டேடியத்தில் நடைபெற்ற, மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை, கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார். இதில் மாற்றுத் திறனாளி ஆண்கள் பிரிவில்- 92 பேரும், பெண்கள் பிரிவில் - 67 பேரும் என மொத்தம் 159 பேர் கலந்து கொண்டனர்.

கை, கால்கள் பாதிப்புடையோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்டவையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், காது கேளாதோருக்கு 100, 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது.

இவை தவிர மேலும் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் திருமுருக தட்சிணாமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  9. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  10. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...