ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
X

ஆனி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்–மோகனூர் ரோட்டில் உள்ள,ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆனி கிருத்திகை விழா காலை, 8 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தங்கக் கவசம் சாத்தப்பட்டு, மனோரஞ்சிதம், செவ்வரளி மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவர் பாலதண்டாயுதபாணி சுவாமி, வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், சுவாமிக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

Updated On: 25 Jun 2022 11:15 AM GMT

Related News