/* */

நாமக்கல்லில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

பொது சுகதாரத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் குழுற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்
X

நாமக்கல் மாவட்டம் எர்ணாபும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ, மாவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையின் சார்பில் இம்மாதம் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை முதல் சுற்றும், 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை இரண்டாம் சுற்றும், 27ம் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,89,401 குழந்தைகளுக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத 1,53,830 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகாம் துவக்க விழா எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் முகாமை துவக்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு அரசு குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ரத்த சோகை நோய்க்கு முக்கிய காரணியாக விளங்கும் குடற்புழுவை நீக்க ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்கத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள 19 வயதிற்குட்பட்ட அவைருக்கும் குடற்புழு மாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத வேண்டும். அனைவருக்கும் இம்மாத்திரைகள் அங்கன்வாடி மையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசு பள்ளிகளில் அனைத்து வியாழக்கிழமைகளிலும் அரசால் வழங்கப்படுகின்ற இரும்பு சத்து மாத்திரைகளை மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமான, நோயற்ற முன்னோடி மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் 18 வயதிற்கு முன்பும், மாணவர்கள் 21 வயதிற்கு முன்பும் திருமணம் செய்து கொள்ளமாட்டோம் என்றும், கட்டாயம் கல்லூரி படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு பெற்று உங்களுடைய பெற்றோர்களை நன்கு கவனித்து கொள்வோம், அதன் பிறகே திருமணம் செய்து கொள்வோம் என்ற உறுதி மொழியினை எனக்கு வழங்கிட வேண்டும் என அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிஇஓ பாலுமுத்து, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், டாக்டர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...