/* */

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: எஸ்.பி எச்சரிக்கை

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: எஸ்.பி எச்சரிக்கை
X

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரித்துள்ளார்.

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 20ம் தேதி முதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை அதிக வேகமாக ஓட்டுபவர்களுக்கு ஏற்கனவே ரூ.400 ஆக இருந்த அபராதம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிக்னலை மீறினால் ஏற்கனவே ரூ.100 ஆக இருந்த அபராதம் தற்போது 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டினால் ரூ.1,000 ஆக இருந்த அபராதம் இனி முதல் முறை ரூ.1,000 இரண்டாம் முறையாக இருந்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது ரூ.2,000 ஆக உள்ள அபராதம் இனி ரூ.10,000. சரக்கு வாகனங்களில் குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக சரக்கு ஏற்றினால் தற்போது ரூ. 2,000 அபராதம் கூடுதல் எடைக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் உள்ளது. இனி அபராதம் ரூ.20,000 மேலும் அதிக எடை ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வசூலிக்கப்படும். ஹெல்மட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் சென்றால் தற்போது ரூ.100 அபராதம் உள்ளது. இனி ரூ1,000 அபராதம் வசூக்கப்படும். இதைப்போன்று பல்வேறு வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதத்தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் போலீஸ் எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி கூறியுள்ளதாவது:-

தமிழகத்தை பொறுத்த வரையில் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து விதிமீறலுக்கு கூடுதல் அபராதம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இதுவரை ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் கண்கூசும் விளக்கு பொருத்தியிருத்தல் உள்பட போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக 16,684 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 1,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு விபத்து மரணம் சற்று குறைந்து உள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் போக்குவரத்து இன்றி இருந்தது. அதை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கையால் விபத்துகள் வெகுவாக குறைந்து உள்ளது என்றே கூற வேண்டும். அதிக அளவில் விபத்துகளுக்கு சாலை வடிவமைப்பு, அதி வேகமாக வாகனங்களை ஓட்டுதல் போன்றவையும் காரணமாக இருந்து வருகிறது. எனவே சாலைபாதுகாப்பு கூட்டத்தில் அது தொடர்பாக விவாதித்து தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. குடி போதையில் வாகனம் ஓட்டினால் தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்ட திருத்தத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 23 Oct 2022 8:10 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை