/* */

போதமலைக்கு முதல் முறையாக சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த முதல்வர்

போதமலைக்கு முதல் முறையாக ரூ. 140.0 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை வீடியோ கான்பரன்சில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

போதமலைக்கு முதல் முறையாக சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த முதல்வர்
X

போதமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் 

நாமக்கல் மாவட்டம், போதமலை பகுதிக்கு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ. 140 கோடி மதிப்பீட்டில் புதிய மலைப்பாதை அமைக்கும் பணியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1,100 மீ உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ள இந்த மலையில் கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி சுமார் 180.263 ச.கி.மீ பரப்பளவை கொண்டதாகும். கீழூர் பஞ்சாயத்தில், கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 1,727 மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் 1,202 வாக்காளர்கள் உள்ளனர்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இம்மலைப்பகுதி குக்கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி இல்லை. சீரற்ற மற்றும் கரடுமுரடான மலைப்பாதையில் நடைபயணமாகவே மலைவாழ் மக்கள் சென்று வருகின்றனர். தங்களுக்கான அவசர மருத்துவ உதவிக்கு சுமார் 11 கி.மீ நடைபயணமாக மலைப்பகுதியில் நடந்து வந்து, பின்பு அடிவாரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர்.

அவ்வாறு செல்லும்போது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை “டோலி” கட்டி தூக்கி வந்தே சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உரிய காலங்களில் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இவ்வூராட்சியில் கீழூர் குக்கிராமத்தில் உள்ள ஜிடிஆர் ஆரம்ப பள்ளியில் 5 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் கெடமலை குக்கிராமத்தில் ஒரு ஜிடிஆர் ஆரம்ப பள்ளி உள்ளது. அதில் 5 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி கெடமலையில் ஒன்றும், கீழூரில் ஒன்றும் செயல்படுகிறது. இவ்வூராட்சியில் உள்ள மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயில அருகில் உள்ள ராசிபுரத்திற்கு சென்று வரவேண்டியுள்ளது. மலையிலிருந்து தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுவருவது இயலாத நிலையில் பல மாணவர்கள் படிப்பை 5ம் வகுப்புடன் நிறுத்திவிடுகின்றர்.

கீழூர் ஊராட்சியில் உள்ள மூன்று குக்கிராமங்களில் இந்து மலையாளி வகுப்பைச்சார்ந்த 258 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமக இங்கு சிறுதானியங்களை பயிரிட்டு வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சிறுதானியங்கள் அதிக தரத்துடன் இருப்பினும் போதிய சாலை வசதிகள்

இல்லாமையால் அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடி பொருட்களும் தலைச்சுமையாகவே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கீழூர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்களில் சாலை அமைப்பதன் மூலம் மலையில் வசிக்கும் 258 குடும்பங்களை சார்ந்த 1727 நபர்களுக்கும், மலையில் விவசாயம் செய்து வரும் அடிவாரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசித்துவரும் சுமார் 800 குடும்பங்களை சேர்ந்த 3500 நபர்களும் ஆகமொத்தம் 1058 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன்பெறுவர்.

இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோரின் முயற்சியால், ரூ.139 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 31.07 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 27.10.2023 ல் முடிக்கப்பட்டு, வேலை உத்தரவு 18.12.2023 வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று நடைபெற்ற விழாவில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து போதமலைக்கு சாலை அமைக்கும் பணியை வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.

சாலை அமைக்கும் பணிகள், வருகிற 31.05.2025 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Updated On: 17 Feb 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?