/* */

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற கோரிக்கை

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை முழுமையான 4 வழி சாலையாக அமைக்க மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற கோரிக்கை
X

புதுடில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குரவத்து துறை அமைச்சர் நிதின்கட்காரியை, நாமக்கல் எம்.பி. சின்ராஜ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல் எம்.பி சின்ராஜ், புதுடில்லியில் மத்தியநெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை (என்எச்-79) சென்னை நகருடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும் முழுமையாகப் பணி நிறைவடையவில்லை.

இந்த சாலையில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி உட்பட 8 நகரங்களின் புறவழிச்சாலைகள், இன்றும் இருவழிச்சாலைகளாகவே உள்ளன. குறிப்பாக சில தூரம் நான்குவழிச்சாலை, திடீரென இரண்டு வழிச்சாலை, மீண்டும் நான்குவழிச்சாலை என மாறி மாறி அமைந்துள்ளன.

இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் புதிதாக வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை (என்எச்-79) முழுமையாக நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையில் இருந்து 6 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு அமைச்சர் நிதின்கட்காரி, சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தொடர்புகொண்டு சேலம் - உளுந்தூர்ப்பேட்டை நெடுஞ்சாலையை முழுமையாக 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Updated On: 3 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?