/* */

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டு தாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டு தாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டு தாரர்கள்  குறைதீர் முகாம்
X

ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேசன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை விசாரிக்கவும், பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேசன் அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா வழங்கல் அலுவலகங்களில், மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.

நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்.ஐ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். ரேசன் கார்டில், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், போட்டோ திருத்தம், புதிய ரேசன் கார்டு கேட்பு, குடும்பத் தலைவர் பெயர் திருத்தம் உள்ளிட்ட, 80 மனுக்கள் வரப்பெற்றது. அவற்றில் 77 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுக்காக்களில் உள்ள வழங்கல் அலுவலகங்களில், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் முகாம் நடைபெற்றது. முகாம்களில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Updated On: 10 July 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  3. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  4. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  5. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  6. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  8. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!