/* */

நாமக்கல்லில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை! 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை! 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்பு
X

பட விளக்கம் : நாமக்கல் ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்லில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்பு

நாமக்கல்,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் இன்று காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதம் நிறைவில் முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகைய, புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், ரம்ஜானை முன்னிட்டு நாமக்கல் பேட்டை பள்ளிவாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் திரளான முஸ்லீம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா சிறப்பு தொழுகையை நடத்தினார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் தொழுகையில் கலந்துகொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பள்ளிவாசல் துணைத்தலைவர் பாரூக் பாஷா, செயலாளர் நியாமத், துணை செயலாளர் சையத் நாசர், பொருளாளர் மகபூப் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி, மஹபூப் பாஷா, ஆலிம்ஷா, ஷேக் நிஜாம், அப்துல் ரஹ்மான், சிக்கந்தர் ஆகியோர் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 11 April 2024 4:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...