/* */

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டும்: ராமகிருஷ்ணன்

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டும்: ராமகிருஷ்ணன்
X

நாமக்கல்லில் நடைபெற்ற மே தின விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன், கட்சிக்கொடியேற்றி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மே தின கொடியேற்று விழா, நாமக்கல்லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, வரும் 6ம் தேதி, தமிழகம் முழுவதும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு தரும் போராட்டம் நடத்தப்படும். கடந்த 3 ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை, தனி நபர் மீது செலுத்தி, 8 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. அதனால், கூடுதல் வரியை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

பல்கலை துணை வேந்தர்களை, மாநில அரசு நியமனம் செய்ய கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். நீட் விவகாரத்தில், கவர்னர் தபால்காரர் போலவே செயல்படுகிறார். எனவே, காலம் தாழ்த்தாமல், நீட் விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலை மற்றும் நூற்பாலைகளில், சிறுவர்கள் பணியில் அமர்த்துப்படுவதை தடுக்க வேண்டும். கொத்தடிமைகள் பணி அமர்த்துவதை தடுக்க, மாநில அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 2 May 2022 1:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்