/* */

நாமக்கல்லில் 14-ம் தேதி பெண்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Private Placement -நாமக்கல்லில் வருகிற 14-ம் தேதி பெண்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 14-ம் தேதி பெண்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

Private Placement -அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவு காரணமாக வேலை செய்வதற்கு ஆள் இல்லை. இதன் காரணமாக அந்த நாடுகளில் வேலை செய்வதற்காக இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் குவிகிறார்கள். அவர்களுக்கு கை நிலைய சம்பளம் கிடைப்பதால் காலப்போக்கில் அவர்கள் வேலை செய்வதற்காக சென்ற அந்தந்த நாடுகளிலேயே செட்டில் ஆகி விடுபவர்களும் உண்டு. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மத்திய மாநில அரசுகள் ஆண்டு தோறும் இத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்து விட்டோம் என அவ்வப்போது அறிவித்தாலும் வேலை இல்லா திண்டாட்டம் தீர்ந்த பாடில்லை.

சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விவரத்தின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் படித்து விட்டு வேலை கேட்டு பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் ௭௫ லட்சமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நாமக்கல்லில் வருகிற 14ம் தேதி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாமக்கல் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 2020, 2021 மற்றும் 2022ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்கள் 145 செமீ உயரம், அதிகபட்சம் 65 கிலோ எடை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ரூ. 16,557 மாதச்சம்பளம், தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் இடவசதி வழங்கப்படும். இம்முகாம் முற்றிலும் இலவசமாகும். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய பயோ டேட்டா, உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற போன் நம்பரை தொடர்பு கொள்ளலாம்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 Oct 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்