/* */

நாமக்கல் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை

Egg Poultry Farm- நாமக்கல் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை
X

Egg Poultry Farm- நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அவர் நாமக்கல் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கி இருந்தார். அவரை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ், செயலாளர் சுந்தரராஜன், இணைச் செயலாளர் சசிகுமார், நிர்வாகிகள் கோவிந்தராஜ், பிரபு மற்றும் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:

தமிழக சத்துணவுத் திட்டத்திற்கான, முட்டை விநியோகத்தில் அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவித்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கோழித் தீவன மூலப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தவும், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் வீணாகி வரும் உணவு தானியங்களை மானிய விலையில், கோழித்தீவனத்திற்காக, பண்ணையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 10:08 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!