/* */

அரசு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த திமுக ஒப்பந்ததாரர்கள் மீது போலீசில் புகார்

TN Police Complaint -அரசு அதிகாரியை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மீது பிடிஓ போலீசில் புகார் செய்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த திமுக ஒப்பந்ததாரர்கள் மீது போலீசில் புகார்
X

பைல் படம்.

TN Police Complaint -நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு அதிகாரியை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மீது பிடிஓ போலீசில் புகார் செய்துள்ளார்.

இது குறித்து மோகனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, மோகனூர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்களான ஜி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ஜி.எஸ்., கன்ஸ்ட்ரக்சன் சதீஸ் ஆகியோர், நேற்று மதியம், 3.20 மணிக்கு, அலுவலக நேரத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் வந்தனர். அவர்கள், அலுவலக நேரத்தில் பிடிஓ அறையில் பணியில் இருந்த, அனைத்து அலுவலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், பணி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில், துணை பிடிஓவை தரக்குறைவாக பேசி, அவமானப்படுத்தினார்கள். மேலும், நாங்கள் இல்லை என்றால் உங்களுக்கு வேலை இல்லை. நாங்கள் கொடுக்கும் வேலையில்தான் சம்பளம் பெறுகிறீர்கள் என கேவலமாக பேசி, துணை பிடிஓவை, மிரட்டினார்கள். இச்சம்பவம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவரை மிரட்டி பயமுறுத்தியது, போன்ற காரணங்களால் கிரிமினல் நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். அதனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கோவிந்தராஜ், அவரது மகன் சதீஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகாரில் கூறப்பட்டுள்ள கான்ட்ராக்டர் கோவிந்தராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., பிரதிநிதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் தொடர்பாக, மோகனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக நிர்வாகிகளால் திமுகவிற்கும், தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திமுகவினர் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் அரசு அலுவகங்களில், பணிகளை டெண்டர் எடுக்கவும், வேலைக்கான பணத்தை பெறவும் அடிக்கடி நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்து அங்கு தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் மோகனூர் வட்டார வளர்சசி அலுவலகத்தில் நுழைந்த திமுகவைச் சேர்ந்த கான்ட்ராக்டகர்கள், பணியில் இருந்த அரசு அதிகாரிக்கு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 13 Oct 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!