/* */

அரசு புறம்போக்கில் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கை: பெண்கள் கண்ணீர் விட்டு கதறல்

ஜேடர்பாளையம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு.

HIGHLIGHTS

அரசு புறம்போக்கில் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கை: பெண்கள் கண்ணீர் விட்டு கதறல்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து கதறி அழுத காட்சி.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 4 தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்தநிலையில், ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, அங்கு சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 3 வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த, அப்பகுதியை சேர்ந்த திளான பெண்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து கண்ணீருடன் கதறி அழுதனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

நாங்கள், எங்கள் மூதாதையர்கள் துவங்கி, 100 ஆண்டுகளுக்கு மேல் ஜேடர்பாளையம் அருகே வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் சொந்த வீடு கிடையாது. தற்போது, ஒரு தனி நபரின் தூண்டுதலின் பேரில், எங்களை காலி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாங்கள வெளியேற்றப்பட்டால், எங்களுக்கு வேறு இடம் இல்லை. நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நாங்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் நிலையை, தமிழக அரசுக்கும், கோர்ட்டுக்கும் எடுத்துக்கூறி, எங்களை காலி செய்வதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 12 July 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  4. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  5. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  6. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  7. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  8. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  9. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  10. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்