/* */

நாமக்கல்: பெண்களுக்கு செயற்கை நகைகள் தயாரிப்பு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல்லில் பெண்களுக்கான செயற்கை நகைகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு, வரும் 25ம் தேதி தொடங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்: பெண்களுக்கு செயற்கை நகைகள்   தயாரிப்பு குறித்து இலவச பயிற்சி
X

இது குறித்து, நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் பிருந்தா வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்ட பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் குறித்த இலவச சுயவேலைவாய்ப்பு தொழில் பயிற்சி வரும் 25- ஆம் தேதி தொடங்கி, 13 நாட்கள் நடைபெற உள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஜூலை 24ஆம் தேதிக்குள் நேரில் வந்து தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவேண்டும்.

குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். விண்ணப்பங்களை நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-221004, 98989 96424, 88259 08170 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 July 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...