/* */

நாமக்கல்: இயற்கை விவசாயச்சான்று பெற்று பயனடைய அழைப்பு

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இயற்கை விவசாயச் சான்று பெற்று பயன்பெறலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: இயற்கை விவசாயச்சான்று பெற்று பயனடைய அழைப்பு
X

கோப்பு படம்

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எதிர்கால சந்ததியை காக்க விவசாயிகள் நீடித்த நிலையான இயற்கை விவசாயத்திற்கு மாறுவது காலத்தின் அவசியம் ஆகும். இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் செயற்கை இடுபொருட்களான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தவிர்த்து. இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள், பண்ணைக்கழிவு, உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, வேம்பு, தாவரங்கள் சார்ந்த பொருட்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை கொண்டு பெரும்பாலும் விவசாயிகள் தன் பண்ணை சார்ந்த இடுபொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு தற்சார்பு விவசாய முறையாகும்.

விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயற்கை வழி விவசாயத்தில் விதை முதல் உற்பத்தி, அறுவடை, விளைபொருட்கள் விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் கடைபிடிக்க வேண்டிய சில தர நிர்ணயங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை திட்டத்தின்படி அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச்சான்று எனப்படும் இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

அங்ககச்சான்று பெற தனி நபராகவோ, அல்லது குழுவாகவோ பதிவு செய்யலாம். மேலும் வனப்பொருட்களை சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பெருவணிக நிறுவனங்களும் அங்கக பொருட்களை பதன் செய்வோரும் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். அங்ககச் சான்றிதழ் பெற விண்ணப்ப படிவம் பண்ணையின் பொது விவர குறிப்புகள், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்த் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், பான் கார்டு. ஆதார் அட்டை, போட்டோ ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பதிவு கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் பயணக் கட்டணமாக வருடத்திற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2700, இதர விவசாயிகள் ரூ.3200 குழுவாக பதிவு செய்ய ரூ.7200 மற்றும் பெருவணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 கட்டணமாக வங்கி டிராப்ட் மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல், மாவட்ட அங்ககச்சான்றுஅலுவலகத்தை 8825895746 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!