/* */

நாமக்கல்லில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு சார்பில் சாதனை விளக்க பிரச்சாரம்

நாமக்கல்லில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு சார்பில்   சாதனை விளக்க பிரச்சாரம்
X

நாமக்கல்லில் பாஜக சிறுபான்மை பிரிவினர் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மையினர் பிரிவு சார்பில், மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளை விளக்கி வீடு, வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மையினர் அணி சார்பில், மத்திய பா.ஜ..க அரசின் 9 ஆண்டுகால சானைகளை விளக்கி வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்டப பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தலைவர் ஷாஜஹான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலதிட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி, வீடுதோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் ரஜியாபேகம், துணைத்தலைவர்கள் அலாவுதீன், மும்தாஜ்பேகம் மற்றும் சிறுபான்மை பிரிவு செயற்குழு உறுப்பினர்கள் மீரா,சாபிருன், அக்பர்பாஷா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று பா.ஜ.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினார்கள்.

பின்னர் இஸ்லாமியர்கள் வீட்டு கதவுகளில் பாரத பிரதமர் மோடியின் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில், நாமக்கல் வரும் போது சிறுபான்மை பிரிவினர் ஒன்றினைந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Updated On: 17 July 2023 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க