நாமக்கல் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல்: நாளை வேட்புமனு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல் நடைபெறுவதால், வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல்: நாளை வேட்புமனு
X

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுடன் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்டோபர் 9-ந் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 6-வது வார்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி (பொது), எருமப்பட்டி ஒன்றியத்தில் 15-வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவி (பொது), கோப்பணம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கூடச்சேரி, நடுகோம்பை பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கிராமப்பஞ்சாயத்து வார்டுகளில், மண்டகபாளையம் 3-வது வார்டு, கோணங்கிப்பட்டி 9-வது வார்டு, பவித்திரம் 2-வது வார்டு, இருக்கூர் 7-வது வார்டு, தின்னனூர்நாடு 5-வது வார்டு, பிள்ளாநத்தம் 4-வது வார்டு, என்.புதுப்பட்டி 8-வது வார்டு, பெரப்பன்சோலை 2-வது வார்டு, கார்கூடல்பட்டி 6-வது வார்டு, மங்களபுரம் 8-வது வார்டு, செருக்கலை 9-வது வார்டு, பில்லூர் 4-வது வார்டு, காரைக்குறிச்சிபுதூர் 3-வது வார்டு, எஸ்.உடுப்பம் 6-வது வார்டு, திருமலைப்பட்டி 7-வது வார்டு, பொட்டணம் 3-வது வார்டு, உத்திரகிடிகாவல் 7-வது வார்டு, ஆண்டிபாளையம் 6-வார்டு ஆகியவற்றிற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள மொத்தம் 25 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று 15ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய 22-ந் தேதி கடைசி நாளாகும். அக்.9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2021-09-14T08:50:34+05:30

Related News