/* */

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? 18ம் தேதி முதல் மேல் முறையீடு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத விண்ணப்பதாரர்கள் 18ம் தேதி முதல், ஆன்லைனில் மேல் முறையீடு செய்யலாம்.

HIGHLIGHTS

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? 18ம் தேதி முதல் மேல் முறையீடு
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத விண்ணப்பதாரர்கள் 18ம் தேதி முதல், ஆன்லைனில் மேல் முறையீடு செய்யலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட, தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுகளில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1 கோடிய 650 பெண்கள்பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேல்முறையீடு:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, தகுதியில்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த எம்எம்எஸ் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வருகிற 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், எஸ்எம்எஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத்திட்ட தாசில்தார்கள் மூலம் கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்யப்படும்.

புகார்கள்:

மேலும், பொதுமக்கள் இத்திட்டம் தொடர்பாக தங்களது சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1800 425 1997, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் 04286-232101, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் 04288-256000, தாசில்தார் அலுவலகங்கள் : நாமக்கல் 04286 - 233701, ராசிபுரம் 04287-222840, சேந்தமங்கலம் 04286-271127, கொல்லிமலை 63792-85667, மோகனூர் 04286-297768, திருச்செங்கொடு 04288-253811. பரமத்திவேலூர் 04268-250099, குமாரபாளையம் 04288-264546.

செல்போன் ஓடிபி :

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000/- வரவு வைக்கப்பட்டு அதற்கான எஸ்எம்எஸ்அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில பயனாளிகளுக்கு இந்த எஸ்எம்எஸ்ஐ தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தும் ஓடிபி கேட்டு தொலைபேசி அழைப்பகள் வந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே, இத்திட்டத்திற்கான ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) எதுவும் அரசு தரப்பிலிருந்து கேட்கப்படுவதில்லை. அவ்வாறு யாராவது கேட்டால் கொடுக்கத் தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...