/* */

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக முன்பதிவு 13ம் தேதி துவக்கம்

Namakkal Sree Anjaneyar Temple -நாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு 2023ம் ஆண்டிற்கான அபிசகே முன்பதிவு வருகிற 13ம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்  ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக முன்பதிவு  13ம் தேதி துவக்கம்
X

பைல் படம்

Namakkal Sree Anjaneyar Temple -நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக எதிரில், உள்ள மலையைக் குடைந்து குடவறைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் கோயிலில் உள்ள ஸ்ரீ நரசிம்மரையும், சாலகிராம மலைøயையும் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் எடுத்து வந்த சாலகிராமம் மலையாக உருவாகி உள்ளதால்,அந்த மலை வெட்டவெளியில் உள்ளது. இதுபோலவே ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்துள்ளது சிறப்பாகும்.

தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தினசரி காலை 9 மணிக்கு, சுவாமிக்கு 1,008 வடை மலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை பொருட்களால் சிறப்பு அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெறும்.

ஆஞ்சநேயருக்கான வடைமாலை சார்த்துதல் மற்றும் அபிசேகம் தினசரி ஒரு முறை மட்டுமே நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு, மலர் அங்கி, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரம் செய்யப்படும்.

ஆஞ்சநேயர் சாமிக்கு தினசரி அபிசேகம் மற்றும் அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஒரு ஆண்டிற்கு முன்னரே முன்பதிவு செய்துகொள்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிசேகத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 நபர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிசேகம் முடிவில் பிரசாதம் வழங்கப்படும்.

வருகிற 2023ம் ஆண்டிற்கான ஆஞ்சநேயர் சுவாமி அபிசேக முன்பதிவு வருகிற நவ.13ம் தேதி துவக்கப்பட உள்ளது. அபிசேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், கோயில் நிர்வாக அலுவலகத்தில் முழுத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேகத் தேதி முன்பதிவு செய்யப்படும். தொகையை செலுத்தாவிடில் தேதி முன்பதிவு செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-233999 என்ற திருக்கோயில் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் கோயில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Nov 2022 5:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!