/* */

தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு: பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு நிறுத்தம்

கோழித்தீவன மூலப்பொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பண்ணையாளர்கள் புதிய கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு:  பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு நிறுத்தம்
X

நாமக்கல் மண்டலத்தில், கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள்சங்க செயலாளர் சுந்தரராஜ் கூறியுள்ளதாவது:

நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1000 முட்டைக்கோழிப் பண்ணைகள் உள்ளன. சுமார் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம், மற்றும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோயா, கம்பு, கடலை புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்பட கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒரு முட்டையை உற்பத்தி செய்ய ரூ.4 80 காசுகள் செலவாகிறது. முட்டை விலை என்இசிசி ரூ.5 ஆக அறிவித்தாலும், வெளி மார்க்கெட்டில் ரூ.4.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு முட்டைக்கு 30 பைசா நஷ்டம் ஏற்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பால், கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலீட்டு வட்டி, ஆட்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களும் அதிகரித்து வருவதால், ஒரு முட்டை ரூ.5.50க்கு விற்பனை செய்தால்தான் பண்ணையாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள பல கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி செய்யக்கூடிய கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மத்திய அரசின் எப்சிஐ குடோன்களில் இருப்பில் உள்ள உணவுக்கு பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களை, மானிய விலையில் கோழிப்பண்ணையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Updated On: 26 Jun 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...