/* */

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

namakkal news, namakkal news today- மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு
X

namakkal news, namakkal news today- நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

namakkal news, namakkal news today- இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம், 10,880 எம்டிஎஸ் (மல்டி டாஸ்கிங் ஸ்டாப்) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான பணி காலியிடம் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்தல் எஸ்எஸ்சி.என்ஐசி.இன் என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும். கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் இத்தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும், வெப்சைட்டில், அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் டவுன் லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை. காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு இரவு, 7 மணியிலிருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!