/* */

ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

namakkal news, namakkal news today- ஏற்கனவே அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு (டெட்) எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’  தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பட்தாரி ஆசிரியர் கூட்டமைப்பின், செயற்குழு கூட்டத்தில் அதன் தலைவர் செல்லையா பேசினார்.

namakkal news, namakkal news today- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் செல்லையா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மாநில அரசுகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. அந்த நடைமுறையை பின்பற்றி, தமிழக அரசும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான, நிலுவையில்லா அகவிலைப்படி உயர்வு மற்றும் கால வரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், 6 முதல், பத்தாம் வகுப்பு வரை, கற்றல்–கற்பித்தல் பணி மேம்பட, அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும், குறைந்த பட்சம், 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிய பிறகே, பணி நிரவல் செய்ய வேண்டும்.

2010–2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 3 கட்டமாக போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 16ம் தேதி, மத்திய மண்டலம் திருச்சியிலும், அக்டோபர் 15ம் தேதி தெற்கு மண்டலத்திலும், 2024 ஜனவரி இறுதியில், சென்னையில் மாநில அளவிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 20 March 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  2. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  4. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  5. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  6. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  7. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  8. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  9. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?