/* */

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்
X

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் துவக்கி வைத்தார். அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக்.

இந்தியா முழுவதும் நாள்தோறும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாநில ஓபிசி பிரிவு துணைத்தலைவர் டாக்டர் செந்தில், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, வள்ளிபுரம் ரகு, தாஜ், பொன்முடி, குமார், அருணகிரி, ஸ்டாலின், சாந்திமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 8 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...