/* */

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங். (கோப்பு படம்).

தமிழகத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், மாதம் ஒன்றுக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200-ம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300-ம், பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம், 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தற்போது 1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவர்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்தவரை 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

தகுதியுடைய இளஞைர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும், tnvelaivaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தில் 7 ஆம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும்.

இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Dec 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்