/* */

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது : நாமக்கல் மாவட்ட அதிமுக தீர்மானம்

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும்  எவ்வித தொடர்பும் கிடையாது :  நாமக்கல் மாவட்ட அதிமுக தீர்மானம்
X

அதிமுக கொடி (மாதிரி படம்)

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதி செயல்கள் அனைத்தையும் முறியடித்து பொதுமக்களின் ஆதரவுடன் அதிமுக கூட்டணி கட்சிகள் 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் 66 எம்எல்ஏக்கள் தேர்வாகி, மக்களின் உண்மை தொண்டர்களாகப் பணியாற்ற ஆர்வமாக உள்ளனர். இச்சூழ்நிலையில் தேர்தலின்போது அரசியலிலிருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிவித்த சசிகலா, தற்போது அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக் கொள்வதற்காக அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

தினசரி தொலைபேசியில் சிலருடன் பேசும் விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மேலும் சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. அவர் தொலைபேசியில் சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருக்கும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்திற்கு உரியது.

அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் இக்கூட்டம் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம். சசிகலாவிடம் பேசிய அனைவரும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதை நாமக்கல் மாவட்ட அதிமுக வரவேற்கிறது. தமிழகத்தில், கோர்ட் அறிவுரையின்படி கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 Jun 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...