/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில், இன்று 228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் நேற்று 12ம் தேதி 168 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 13ம் தேதி மொத்தம் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 37 பேர் சிகிச்சையில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,429, இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 54,234 பேர். மொத்தம் 673 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 13 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!