/* */

நாமக்கல் தொகுதி தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் தொகுதி தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு
X

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது மற்றும் செலவின பார்வையாளர்களுடன் ஆட்சியர் உமா ஆலோசனை நடத்தினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி, தேர்தல் கமிஷன் பெது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், செலவின பார்வையளர் அர்ஜூன் பேனர்ஜி ஆகியோருடன், நாமக்கல் ஆட்சியர் உமா, போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

நாமக்கல் லோக்சபா தொகுதி, தேர்தல் கமிஷன் பொது பார்வையளர் மற்றும் செலவு கணக்கு பார்வையாளர் ஆகியோரை தொடர்புகொள்ள செல்போன் நம்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாமக்கல் மாவட்டஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் லோக்சபா தேர்தலுக்காக, அனைத்து தொகுதிகளுக்கும், மத்திய தேர்தல் பார்வையாளர்களை, இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் லோக்சபா தொகுதி தேர்தலுக்காக, மத்திய தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளராக ஹர்குன்ஜித்கவுர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்க நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

லோக்சபா தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர் ஆகியோரை, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கான தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் லோக்சபா தொகுதி பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் செல்போன் எண்: 94899 48813. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி செலவின பார்வையாளர் செல்போன் எண்: 94899 48812 என அறவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 27 March 2024 9:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்