/* */

நாமக்கல்: கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையங்களை திறக்க பா.ஜ. கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையங்களை திறக்க பா.ஜ. சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

நாமக்கல்: கட்டி முடிக்கப்பட்ட  இ-சேவை மையங்களை திறக்க பா.ஜ. கோரிக்கை
X

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள, இ-சேவை மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் துறை மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். திட்டத்தின் கீழ், சுமார் 150 க்கும் மேற்பட்ட இ-சேவை மையக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவை திறக்கப்படாமல், இ-சேவை மையங்கள் செயல்படாமல் உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பிப்பு, வாரிசு சான்றிதழ், மின் கட்டணம் செலுத்துதல், ரயில் முன் பதிவு போன்ற சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை.

இதனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக்கட்டிடங்களை விரைவில் திறந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?