/* */

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஜெயந்தி விழா: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 2ம் தேதி நடைபெறும் ஜெயந்தி விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்.

HIGHLIGHTS

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஜெயந்தி விழா: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
X

பைல் படம்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 2ம் தேதி நடைபெறும் ஜெயந்தி விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் நகரில் புராண சிறப்புப்பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை நாளில், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறும்.

இந்த ஆண்டு வருகிற 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைகளால் உருவாக்கப்பட்ட மாலையால், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு வடை பிரசாதம் வழங்கப்படும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி உள்ளிட்டோர் ஆஞ்நேயர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில்போது, நாமக்கல் அருகே உள்ள அருள்மிகு நைனாமலை வருதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு மலைப்பாதை அமைக்கும் பணி நிறைவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக சுற்றுலாத்துறையில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த மலைப்பாதை அமைக்கும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 31 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு