/* */

காவிரி-திருமணி முத்தாறு - சரபங்கா நதிகளை இணைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டம்...

காவிரி, திருமணி முத்தாறு சரபங்கா ஆறுகளை இணைக்க வலியுறுத்தி, நாமக்கலில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

காவிரி-திருமணி முத்தாறு - சரபங்கா நதிகளை இணைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டம்...
X

காவிரி-திருமணி முத்தாறு - சரபங்கா நதிகளை இணைக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்திய அரசியல் நிர்ண சாபையில் உறுப்பினராகவும், இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், தமிழகத்தில் எம்எல்ஏ, எம்எல்சி, எதிர்க்கட்சித் தலைவர், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நாட்டாண்மைக் கழகத் தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர் திருச்செங்கோடு டி.எம். காளியண்ணன். இவர் பதவியில் இருந்தபோது காவிரியில் வரும் உபரிநீரை, திருமணி முத்தாறு, சரபங்கா ஆகிய நதிகளுடன் இணைத்து, சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பேருதவி செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை கொண்டு செயல்பட்டார்.

இதுவரை அந்த திட்டம் நிறைவேறவில்லை. இதை வலியுறுத்தி, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபம் அருகில் இருந்து நாமக்கல் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. நாமக்கல் கொங்குநாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். டிஎம் காளியண்ணன் பவுண்டேசன் நிறுவனத்தலைவர் டாக்டர் செந்தில் முன்னிலை வகித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், காளியண்ணனின் மகனுமான ராஜேஸ்வரன் மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவு, பெண்களுக்கு 5 கிலோ மீட்டர், பெரியவர்களுக்கு 10 கிலோ மீட்டர் என்ற முறையில் 3 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நாமக்கல் கொங்கு மண்டபத்தில் இருந்து வள்ளிபுரம் வரை இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் கொங்கு திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. ஓட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்த சுமார் 1,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பொதுமக்களும் மாரத்தானில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, நாமக்கல் கொங்குநாட்டு வேளாளர் சங்கத்தின் 50ஆவது ஆண்டு துவக்க விழா, தியாகி டி.எம்.காளியண்ணன் 103 ஆவது பிறந்த நாள் நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாண்டிச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், திருச்சி காங்கிரஸ் பிரமுகர் வேலுசாமி, நாமக்கல் நகராட்சித் தலைவர் காலநிதி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.

மாரத்தான் ஓட்டத்தில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் கொங்குநாட்டு வேளாளர் சங்க பொருளாளர் அருட்செல்வி நன்றி கூறினார்.

Updated On: 8 Jan 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்