/* */

மோகனூர் அருகே ரூ.700 கோடி மதிப்பு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற எம்எல்ஏ கோரிக்கை

மோகனூர் அருகே ரூ.700 கோடி மதிப்பிலான தடுப்பணை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே ரூ.700 கோடி மதிப்பு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற எம்எல்ஏ கோரிக்கை
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில், மயில்கள் தொல்லையால் விவசாய பயிர்கள் நாசமாகின்றது. அதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனூர்–நெரூர் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 700 கோடி மதிப்பில், தடுப்பணை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விவசாயிகள் நலன் கருதி, அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தடுப்பணை திட்டம் குறித்து, மாவட்ட நிர்வாக முழு தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

துரைசாமி (தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி): விவசாயிகள் செய்யும் சாகுபடி பயிருக்கு போதிய விலை இல்லை. அதனால், கல்லை நட்டு நிலத்தை விற்பனை செய்து வருகின்றனர். சம்பள கமிஷன், விவசாய கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், சம்பள கமிஷன் பரிந்துரை செய்யும் அரசு, விவசாய கமிஷனை கண்டு கொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலைங்கள், வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம், பால் கொள்முதல் விலையாக, லிட்டருக்கு ரூ. 25 முதல் 30 மட்டுமே தருகிறது. ஆனால், அரசு கொள்முதல் செய்து, வெண்ணை எடுத்தபின், லிட்டர் ரூ. 50 வரை விற்பனை செய்கிறது. விவசாயிகளுக்கு, பால் உற்பத்தி செலவு, லிட்டருக்கு ரூ. 33 ஆகிறது. அதனால், பசும்பாலுக்கு ரூ. 40, எருமை பாலுக்கு ரூ. 50 ஆக விலை உயர்த்தி வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 510 ஆவின் பால் சேகரிப்பு மையங்கள் உள்ளது. பால் விலையை உயர்த்தாவிட்டால் ஆவினுக்கு பால் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டி வரும்.

கந்தசாமி (விவசாயி): வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில், பருத்தி அறுவடை செய்து சாக்கில் கொண்டுவரப்படுகிறது. அந்த சாக்கு ரூ. 35 ரூபாய் கொடுத்து வாங்கி வருகிறோம். ஆனால், கூட்டுறவு விற்பனை சங்கத்தில், அந்த சாக்கை எடுத்துக் கொண்டு ரூ. 10 மட்டுமே வழங்குகின்றனர். அதனால், எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே சாக்கின் விலையான ரூ. 35 ஐ வழங்க வேண்டும்.

பாலசுப்ரமணியன் (மாநில பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்): நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், வளையப்பட்டி, எர்ணாபுரம், திருச்செங்கோடு உள்பட 8 இடங்களில், 108 அவசர கால ஆம்புலனஸ் சேவை, இரவு நேரங்களில் இயக்குவதில்லை. அதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அவசர ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் இயக்க வேண்டும்.

சந்திரசேகரன் (விவசாய சங்க நிர்வாகி): காய்கறி ஏற்றி வரும் லாரிகளில், போலீசார் மாமூல் வாங்குவதுடன், தேங்காய் உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துக்கொள்கின்றனர். அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நீடித்தது.

Updated On: 1 Oct 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...