/* */

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 28-ம் தேதி நாமக்கல் வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 28-ம் தேதி நாமக்கல் வருகையையொட்டி பந்தல் அமைப்பதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 28-ம் தேதி   நாமக்கல் வருகை
X
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வருகையையொட்டி பந்தல், மேடை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில், வருகிற 28ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகெள்ளும் விழாவிற்கான, மேடை அமைக்கும் பணியை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந் தவகையில்நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 28ம் தேதி வருகை தந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய பணிகள் துவக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வருகிற 28ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசுகிறார். அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

28ம் தேதி காலை அரசு விழாவைத் தொடர்ந்து, பகல் 12 மணியளவில் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கோஸ்டல் ஓட்டல் வளாகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுகிறது. கட்சியின் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுமார் 1000க்கும் மேற்பட்ட மூத்த தி.மு.க. உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்கிப் பேசுகிறார். பின்னர் திருச்செங்கோடு சென்று, மேற்கு மாவட்ட தி.மு.க .சார்பில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார்.

அரசு விழா நடைபெறும் இடத்திலும், மாவட்ட தி.மு.க. சார்பில் விழா நடைபெறும் இடத்திலும் பந்தல் மற்றும் மேடை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பந்தல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, மாநில தி.மு.க. தீர்மானக்குழு துணைத்தலைவர் வக்கீல் இளங்கோவன், நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், நகர தி.மு.க. செயலாளர்கள் ஆனந்த், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் கவுதம், அசோக்குமார், நவலடி, கவுன்சிலர்கள் நந்தகுமார், டாக்டர் விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலர் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 21 Jan 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  4. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  5. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  8. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  9. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  10. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!