/* */

நாமக்கல்லில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

நாமக்கல்லில் தமிழக உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு
X

நாமக்கல்லில் நடைபெற்று வரும் தமிழக உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாமக்கல் சேலம் ரோட்டில் பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்தில் திமுக சார்பில், உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது வருகிறது. தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, மேயர்கள், துணை மேயர்கள், தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து மாநாட்டை துவக்கி வைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ் குமார் வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, சேகர் பாபு, தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, எம்.பிக்கள் திருச்சி சிவா, ஆ.ராஜா, பேச்சாளர்கள் சுப வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசுகின்றனர்.

Updated On: 3 July 2022 5:00 AM GMT

Related News