/* */

பெண் கொலை வழக்கில் தம்பதியருக்கு ஆயுள்: நாமக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு

மகனுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த தம்பதியருக்கு, நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெண் கொலை வழக்கில் தம்பதியருக்கு ஆயுள்: நாமக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு
X

பைல் படம்

மகனுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த தம்பதியருக்கு, நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தியை சேர்ந்தவர் மனோகரன் (58). அவரது மனைவி சுமதி (51), இவர்களுக்கு, 3 மகன்கள் உள்ளனர். அதில், மூத்தமகன் சூரியா, வேலைக்கு சென்ற இடத்தில், திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து, குழந்தையுடன் வசிக்கும் சவுந்தர்யா என்ற பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். அதை விரும்பாத பெற்றோர்கள், விடுதலை பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு இருவரையும் பிரித்து வைத்தனர். ஆனால், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதனால், ஆத்திரம் அடைந்த மனோகரன், சவுந்தர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதையொட்டி கடந்த, 2016ம் ஆண்டு ஆக.14ம் தேதி, இரவு 10 மணிக்கு, தனது மனைவி சுமதியுடன் சேர்ந்து, சவுந்தர்யாவை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, ப.வேலூர் அடுத்த பிள்ளைக்களத்தூர் ரோட்டில் உள்ள செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சவுந்தர்யாவை தடியால் அடித்தும், சேலையால் கழுத்தை நெறித்தும் கொலை செய்தனர். தொடர்ந்து, அங்கேயே குழிதோண்டி உடலைப் புதைத்தனர். ஆனால், சவுந்தர்யா திருப்பூர் சென்றதாக கூறி கொலையை மறைத்துள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சவுந்தர்யா உறவினர்கள், இது குறித்து, பரமத்தி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போ, சவுந்தர்யா கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையொட்டி, மனோகரன், சுமதி இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி நேற்று தீர்ப்பளித்தார். அதில், கொலை செய்த தம்பதியருக்கு, ஆயுள் தண்டனையும், தலா, 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கோவை ம த்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கூலி தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த சாமியார், தம்பி கைது

மோகனூர் அருகே கூலி தொழிலாளிø கழுத்தை அறுத்து கொலை செய்த சாமியார் மற்றும் அவரத தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூரிச் சேர்ந்தவர் மணிவண்ணன் (44) கூலி தொழிலாளி. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிர ச்சினை ஏற்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மணிவண்ணன் தனது தாயார் பட்டிம்மா (70) என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செப். 10ம் தேதி மோகனூர் அருகில் உள்ள சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில் அருகே, மணிண்ணன் கொலைசெய்யப்பட்டு அவரது உடல் வாய்க்காலில் போடப்பட்டிருந்தது.

இது குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகையநல்லூர் ஏரிக்கரையில் மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள், மோகனூர் காவிரி பாசன வாய்க்காலில் உடலை வீசி சென்றது தெரியவந்தது.

மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, போலீசாருக்கு, சாமியார் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தீவிர விசாரணையில் அவர், மணிவண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், மனைவியை பிரிந்த மணிவண்ணன், தொட்டியம் அடுத்த எம்.புத்தூர் தொட்டியபட்டி, சீனிவாசன் (36) என்பவர், சாமி சொல்வதுடன் மாந்திரீகம் செய்து வருவது தெரிந்து, அவரிடம் சென்று, மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக, அதிக பணம் செலவழித்துள்ளார். ஆனால், பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. அதனால், ஆத்திரம் அடைந்த மணிவண்ணன், சாமியார் சீனிவாசனை தாக்கி உள்ளார். ஆத்திரம் அடைந்த சீனிவாசன், தனது தம்பி சரத்குமாருடன் (30) சேர்ந்து, நாகையநல்லூர் ஏரிக்கரையில் கடந்த செப். 9ம் தேதி இரவில், கட்டையால் தாக்கி உள்ளனர். அதில் கீழே விழுந்த மணிவண்ணனை, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலை டூ வீலரில் வைத்துக் கொண்டு சென்று, மோகனூர் காவிரி வாய்க்காலில் வீசிச் சென்றுள்ளனர்.

இதையொட்டி மோகனூர் போலீசார், சாமியார் சீனிவாசன், அவரது தம்பி சரத்குமார் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆனர் செய்தனர். அவர்களிடம் இருந்து டூ வீலர் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Oct 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  5. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  7. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  8. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  9. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...