/* */

நாமக்கல்லில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: எம்.பி துவக்கி வைப்பு

நாமக்கல்லில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: எம்.பி  துவக்கி வைப்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.

நாமக்கல் வடக்கு, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராஜ்சயபா எம்.பி ராஜேஸ்குமார் முகாமை துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளி இளம் சிறார் நலத்திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, குடும்ப நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தாய் சேய் நலம், நோய்த்தடுப்புத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் தடை குறித்தும், மீண்டும் மஞ்சள்பை திட்டம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

எடைகுறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களையும், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சித்த மருத்துவத்துறையின் சார்பில் மகப்பேறு சஞ்சீவினி பெட்டகங்களையும், சத்தான உணவு பொருட்களையும், பொதுமக்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகளையும் ராஜேஷ்குமார் எம்.பி வழங்கினார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன எலக்ட்ரானிக் வாகனத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், வருமுன் காப்போம் முகாம், மக்களைத்தேடி மருத்துவம், கொரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு உள்ளிட்ட சுகாதார விழிப்புணர்வு செய்திப்படங்கள் ஒளிபரப்ப்பட்டன.

முகாமில் நாமக்கல் முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, கவுன்சிலர்கள் சிவக்குமார், கிருஷ்ணபிரியா, அட்மா குழு தலைவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 3 May 2022 9:45 AM GMT

Related News