/* */

நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை துவக்கம்

இந்த திட்டம் 30.8.2021 முதல் 3.9.2021 வரை அனைத்து நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களிலும் செயல்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில்  தங்கப்பத்திரங்கள் விற்பனை துவக்கம்
X

பைல் படம்.

நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும், தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . ஒருவர் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 2.5% ஆண்டு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இந்த திட்டம் 30.8.2021 முதல் 3.9.2021 வரை அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுகிறது. இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4732/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 20 நாட்களுக்கு பிறகு தங்கப் பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்ய விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகங்களையோ அல்லது வணிக வளர்ச்சி அலுவலர்ளை தொடர்பு கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Aug 2021 11:03 AM GMT

Related News