/* */

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கபட்டு, 1964 ஆண்டு, மே 27ம் தேதி இறக்கும் வரை பிரதமராக பணியாற்றினார்

HIGHLIGHTS

மறைந்த முன்னாள்  பிரதமர் நேரு  நினைவு நாள் அனுசரிப்பு
X

மறைந்த பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த பாரதப் பிரதமர் நேருவின் 59வது நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த பாரத பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான நேருவின் 59வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் நேரு பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

நகர காங்கிரஸ் தலைவர் மோகன், பொறியாளர் அணி பொன்முடி, ஐஎன்டியுசி செல்வம், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் லோகநாதன், ஜபூருல்லா, நேதாஜி, மதிவாணன், அருணகிரி, சிவாஜி மன்றம் சந்திரசேகர், கார்த்தி, கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நேரு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி, அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்தார். இந்திய விடுதலை போராட்டத்தின்போது முக்கிய பங்கு வகித்தார். 1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1923ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர் ஆனார். இந்தியாவிற்கு அரசியலமைப்புக் கோரி கையெழுத்திடவர்களில் நேருவும் ஒருவர். இந்த அறிக்கை 1928ம் ஆண்டு அனைத்துக் கட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது.

இந்த அறிக்கைக்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவின் பெயர் வைக்கப்பட்டது. பின்னர், ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் கூடத்தின் தலைவர் ஆனார். மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1930 முதல் 1935ம் ஆண்டுகளில் அவர் பல முறை சிறை சென்றார். குழந்தைகள் மீதி அதிக அன்புக் கொண்டவராக இருந்தபடியால், அவருடைய பிறந்த நாளை “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்படுகிறது. 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய விடுதலை அடைந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கபட்டார். 1964 ஆண்டு, மே 27ம் தேதி காலமானார். அவருடைய இறப்பு வரை சுதந்திர இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார்.

Updated On: 27 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...