/* */

திருச்செங்கோட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

திருச்செங்கோட்டில், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணியை, முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து பேசினார்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு
X

திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணியை அறிமுகம் செய்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

திருச்செங்கோட்டில், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணியை, முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து பேசினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி, தேர்தலுக்காக திருச்செங்கோட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருõன தங்கமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை அறிமுகம் செய்து பேசியதாவது:

கடந்த தமிழக சட்டசபை தேர்தலில், பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு வீடாகச் சென்று, ஏற்கனவே அதிமுக தலைமையிலான அரசு செய்த நலத் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். லோக்சபா தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை விளக்கிக் கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்ட வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி, தேமுதிக மாவட்டச் செயலாளர் விஜய சரவணன், திருச்செங்கோடு நகர அதிமுக செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணைச்செயலாளர் முருகேசன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திரளான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Updated On: 30 March 2024 2:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்