/* */

கிராம சபை தணிக்கை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினர் இடையே மோதல்

நாமக்கல் அருகே கிராம சபை தணிக்கை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

கிராம சபை தணிக்கை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினர் இடையே மோதல்
X

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட தணிக்கையில், ரூ. 7.43 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, கிராம சபையில், அதிகாரிகள் தெரிவித்ததால், அ.தி.மு.க, தி.மு.க.வினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நாமக்கல் மாவட்டம், வேட்டாம்பாடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், விவசாயப் பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, பசுமைவீடு, கழிப்பறை, மாடு மற்றும் ஆடு கொட்டகை, கழிவுநீர் கால்வாய், மரக்கன்று நடுதல், நர்சரி மற்றும் கல் தடுப்பணை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்படுகிறது. இப்பணிகள் குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தணிக்கை நடக்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்சாயத்துகளில், மாவட்ட வள அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறை தணிக்கையாளர்கள், கடந்த 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை தணிக்கை மேற்கொண்டனர். அதில், பெரும்பாலான பஞ்சாயத்துகளில், வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் முறைகேடு, நிதி இழப்பு நடந்துள்ளது, தணிக்கை மூலம் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், 25 பஞ்சாயத்துகளில், காலை, மாலை என, இரு வேளைகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடி கிராம பஞ்சாயத்தில், ரூ. 7.43 லட்சம் நிதி இழப்பு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, 100 நாள் வேலைக்கு பதில், 113 நாட்கள் வரை வேலை வழங்கியது, வேலைக்குச் செல்லாமலே 10க்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் பெற்றது, கால்வாய் பணிகள் துவக்க விழா நடந்த போதும், எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாதது போன்றவை குறித்து, பெயர் மற்றும் இழப்பீடு விபரங்களை, பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த, அ.தி.மு.க. பிரதிநிதிகள் சிலர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இது போன்ற முறைகேடுகள் தெரிவிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தி.மு.க வினர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முறையிட்டனர். அதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

Updated On: 17 Dec 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?