/* */

வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தம்: அதிர்ச்சியில் விவசாயி தர்ணா

சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தியதால் சர்க்கரை ஆலை அலுவலகத்தில் தனது மனைவியுடன் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தம்: அதிர்ச்சியில் விவசாயி தர்ணா
X

மோகனூரில் சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயி, மனைவியுடன் ஆலை அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு, நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்டத்தில் உள்ள, 8 கோட்டங்களில் இருந்து கரும்பு பதிவு செய்த விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து கரும்பு வெட்டி எடுத்து லாரிகள் மூலம் கொண்டு வந்து அரவை செய்யப்படுகிறது.

ஆலையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பிரன்கள் உள்ளனர். நடப்பு, 2021–22ம் ஆண்டுக்கான கரும்பு அரவை துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

மோகனூர் அருகில் உள்ள தீர்த்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி (47), தனது, 90 சென்ட் குத்தகை நிலத்தில், 2020 டிசம்பரில், ஆலைக்கு பதிவு செய்து கரும்பு நடவு செய்தார். 2021, டிச. 26ம் தேதி, கூலி ஆட்களை கொண்டு, கரும்பு வெட்டி ஆலைக்கு அனுப்பினார். ஜன.3வரை, 25 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, கூலி ஆட்கள் ஊருக்கு திரும்பினர். அதையடுத்து, இதுவரை வரவில்லை. மீதம் உள்ள கரும்பை வெட்டி ஆலைக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலை நிர்வாகத்தினருக்கு பலமுறை தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை, கரும்பை வெட்டி எடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தோட்டத்தில் கரும்பு காய்ந்து, விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சி அடைந்த விவசாயி பெரியசாமி, அவரது மனைவி சக்யா (35) ஆகியோர், ஆலையின் கரும்பு பெருக்க அலுவலகத்தில், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, விவசாயி பெரிசாமி கூறுகையில், சாகுபடி செய்த கரும்பை, ஆட்களை கொண்டு வெட்டி எடுத்து அரவைக்கு அனுப்பப்பட்டது. 25 டன் வெட்டிய நிலையில், ஆட்கள் சென்றுவிட்டனர். மீதம் உள்ள, 50 கடன் கரும்பு இன்னும் வெட்டவில்லை. அதனால், வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் செலுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து, ஆலை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் சரியான பதில் இல்லை என்றார்.

ஆலையின் கரும்பு பெருக்க அலுவலர் குருமூர்த்தியிடம் கேட்டபோது, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு சென்ற கரும்பு வெட்டும் ஆட்கள் இன்னும் வரவில்லை. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உரிய காலத்தில் கரும்பு வெட்ட முடியவில்லை. வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, கரும்பு வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

இதற்கிடையில், 3 நாட்களில் மீதம் உள்ள கரும்பை வெட்டி எடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து விவசாயி தர்ணாவை கைவிட்டு மனைவியுடன் வீட்டுக்கு திரும்பினார்.

Updated On: 15 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...