/* */

நாமக்கல்லில் கேஸ் கசிவால் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு; ஒருவர் காயம்

நாமக்கல் நகரில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் கேஸ் கசிவால் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு; ஒருவர் காயம்
X

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகில், கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

நாமக்கல் நகரில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

நாமக்கல் கோட்டை பகுதியில் உள்ள, ஆஞ்சநேயர் கோயில் வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). இன்று காலை இவரது வீட்டிற்கு நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் (25) என்பவர் மாற்று சிலிண்டர் வழங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பார்த்தசாரதி வீட்டின் அருகே உள்ள, ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் என்பவரது மனைவி தனலட்சுமி (60), தங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு உள்ளது. அதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து தனலட்சுமி வீட்டிற்கு சென்ற அருண்குமார் அங்கு காஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்து உள்ளது. தீ பரவியதில் தனலட்சுமி மற்றும் அருண்குமார் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், தீ பரவியதால் ஏற்பட்ட புகையால் பார்த்தசாரதி வீட்டிலும் தீ மற்றும் பகை பரவி உள்ளது. இதில் பார்த்தசாரதி மயக்கம் அடைந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத்துறையினர் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி, கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் ஆகிய மூவரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். தீக்காயம் அடைந்த அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Oct 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்