/* */

நாமக்கல்லில் மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..

Central Govt SSC Exam Free Coaching-மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..
X

நாமக்கல் மாவவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

Central Govt SSC Exam Free Coaching-இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India), 2023ம் ஆண்டிற்கான, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு (Combined Graduate Level Examination, 2023) அறிவிப்பை கடந்த 3ம் தேதி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் “B” மற்றும் குரூப் “C” நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை இந்த அறிவிப்பில் (Recruitment Notice) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில், www.ssc.nic.in என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு எஸ்எஸ்சி.என்ஐசி.இன் என்ற பணியாளர் தேர்வாணையத்தின் வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன், இண்டர்நெட்டில், ஆன்லைன் மூலமாக, வருகிற மே 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து, மே 4ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். தென் மண்டலத்தில், கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில், மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (Staff Selection Commission Exam - CGL) நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் வெப்சைட்டில் (‘TN Career Services Employment’) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘AIM TN’ என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்விற்கான வீடியோக்களை அதில் கண்டு பயன்பெறலாம்.

எனவே, எஸ்எஸ்சி போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு, இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்டையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு