/* */

பார்மசிஸ்ட் போட்டித் தேர்வுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பார்மசிஸ்ட் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பார்மசிஸ்ட் போட்டித் தேர்வுக்கு மாவட்ட  வேலை வாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி
X

பைல் படம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பார்மசிஸ்ட் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்பொழுது மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்ஆர்பி) அறிவிக்கப்பட்டுள்ள 889 பார்மசிஸ்ட் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சிவகுப்புகளில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ அல்லது கூகுள் ஃபார்ம் லிங்க் மூமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவுசெய்து பயன்பெறலாம்.

மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற வெப்சைட் மூலம், வீடியோ கான்பரன்சிங் மூலம் கற்றல், மாதிரி தேர்வுவினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை கொடுத்து லாக் ஆகி போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்யவேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வுசெய்து, அதில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய வசதியாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணியிலிருந்து 90 மணிவரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...